( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )கண்திருஷ்டியை நீக்கும் அபூர்வ தாயத்து !
   பொறாமைகொண்ட ஒரு மனிதனது தீய பார்வையானது, இன்னொரு மனிதனை பாதித்து அவனது உடலையும், மனதையும், தொழிலையும் வாழ்க்கையின் அனைத்து வசந்தங்களையும் கெடுத்துவிடுகிறது. இதை நமது முன்னோர்கள் கண்திருஷ்டி என்று அழைத்தார்கள். இந்த தோஷத்தில் இருந்து விடுபட நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த வழியாகவும், மிக பலம் வாய்ந்த வழியாகவும் சித்தர் கோரக்கர் காட்டிய பரிகார வழி ஒன்றுள்ளது. கோரக்கரின் சூத்திரப்படி குருஜி அவர்கள் உருவாக்கிய “கண்திருஷ்டி பரிகார தாயத்து” நம்மிடம் உள்ளது. அதை அனைவரும் பயன்படும் படி எல்லோருக்கும் பொதுவாக வழங்க விரும்புகிறோம்.

அனைவருக்கும் இதை வழங்குவதற்கு முடிவெடுத்தமைக்கு மிக முக்கிய காரணம் இருக்கிறது. எந்த ஒரு பொருளையுமே பரிசோதனை செய்து பார்க்காமல் அதைப்பற்றி பகிரங்கமாக பேசுவது குருஜிக்கு பழக்கமில்லை. ஒருவர் இல்லாமல் பலபேரிடம் பரிசோதனை செய்து பார்த்த பிறகே அந்த பொருளின் மீது நம்பிக்கையும், திருப்தியும் அவருக்கு ஏற்படும். அந்த வழியில் மிகப்பிரபலமான இரண்டு திரைப்பட நட்சத்திரங்கள், நான்கு மருத்துவர்கள், பல வியாபாரிகள் போன்றோர்களுக்கு இந்த கண்திருஷ்டி தாயத்தை கொடுக்கப்பட்டு மாதக்கணக்கில் அவர்களது நிலைமையை கண்காணித்து அதன் பிறகு பலநூறு மனிதர்களுக்கு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு அதில் நூறுக்கு எண்பது நபர்களுக்கு முழு வெற்றி கிடைத்த பிறகே இதை பற்றிய விவரங்களை வெளியிடுவதற்கு அவர் அனுமதி தந்துள்ளார்.


கண்திருஷ்டி தாயத்தை நீங்கள் பெறுவதற்கு உங்களது பெயர், தந்தை பெயர் மற்றும் தந்தை வழி தாத்தா பெயர் இவற்றை தபாலில் இணைத்து இந்திய ரூபாய்  500/- காணிக்கையை அனுப்பி காணிக்கையை நீங்கள் அனுப்பிய விதம் மற்றும் அதற்கான அத்தாட்சியையும் இணைத்து அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் காணிக்கை கண்டிப்பாக பல சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அந்த காணிக்கையின் மூலம் சேவைகளை செய்த புண்ணியமும் உங்களை வந்து இரட்டிப்பாக சேரும். 


இந்த தாயத்து கண்திருஷ்டியை மட்டும் தடுப்பதில்லை. தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பை தருகிறது. குழந்தைகள், மனதில் வலுவில்லாதவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் இந்த தாயத்தை பயன்படுத்தினால் உடனடியாக பலனை அடையலாம். இதை பெற கால அவகாசம் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒரே கடிதத்தில் பலருக்கு கேட்காதீர்கள். அனைவருக்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்புங்கள்.

மிக முக்கிய குறிப்பு :-

   நீங்கள் அனுப்பிய காணிக்கை விபரத்தையும், அதன் அத்தாட்சியை கண்டிப்பாக தபாலில் குறிப்பிடவும். உங்களைப்பற்றிய விபரங்களை தபால் வழியில் மட்டுமே அனுப்பவும். மின்னஞ்சலை அன்போடு தவிர்க்கவும்.


காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-

(Cheque) அல்லது (D.D)  Guruji  என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும் 

வங்கி முகவரி :-

                    Name : Balu Guruji                    
                    Account Number : 228801500160                    
                    IFSC Code : ICIC0002288                    
                    ICICI BANK LTD,                    
                    VENGUR branch

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:-

Guruji
4/76 c Kamaraj Road,  
Arakandanallur -  605752
Tirukoilur  (Tk),
villupuram (Dt),
Tamilnadu,

Cell No:- +91-9442426434, 
               


இப்படிக்கு 


கல்வியை தரும் சரஸ்வதி அஞ்சனம்


    வசரமான உலகம் இது. உலகம் ஓடுகிற ஓட்டத்தில் கூடவே ஓட முடியாதவன் தோல்வியடைந்து மூலையில் உட்கார்ந்து விட வேண்டியதுதான். ஒருகாலத்தில் உடம்பில் பலம் இருப்பவன் வெற்றி வீரனாக கருதப்பட்டான். இப்போது உடல் பலம் என்பது அலங்கார பொருளாகி விட்டது. ஜெயிப்பவனுக்கு மூளையின் பலம் வேண்டும் அதாவது அறிவு பலம் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது.

தானாக அறிந்து கொள்வது அறிவு என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. புத்தகங்களை படித்து வரக்கூடிய அறிவுதான் அறிவும், திறமையும் என்ற நிலைமை உருவாகி விட்டது. இதனாலேயே நிஜமான அறிவை போதிக்க கூடிய கல்வி நிறுவனங்கள் வியாபாரக்கூடமாகி விட்டது. கல்வி கடை சரக்காகிவிட்டது. யார் விரைவான நேரத்தில் மனப்பாடம் செய்கிறானோ அவனே சிறந்த கல்வியாளன் என்று கருதவும்படுகிறான்.

மனப்பாடம் செய்யும் கலையை கற்றுத்தருவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. மூளைக்கான பயிற்சி, உடம்பிற்கான பயிற்சி என்று அந்த வழிமுறைகள் நீண்டு கொண்டேபோகிறது. அவைகளை சம்மந்தப்பட்டவர்கள் கடினமான முயற்சி செய்து பழகிக்கொள்ள வேண்டும். இப்போது அடிப்படையான சந்தேகம் வருகிறது. படிக்கும் நாள் வெகு குறைவு இதில் மனப்பாடம் செய்ய பயிற்சி எடுப்பதா? அல்லது மனப்பாடம் செய்வதா? இரண்டுக்குமே நேரம் இருப்பதில்லை. இதனால் ஒவ்வொருவரின் கல்வி நிலையும் அவனவன் கிரகக்கோளாறுகளுக்கு தக்கபடி போகிறது.

ஜாதகப்படி கோளாறு இருப்பவர்கள் சரிவர கல்வியை முடிக்க முடியாது. அதனால் அவர்கள் இந்த உலகத்தில் கல்வி கிடைக்காமல் தோற்றுப் போகவேண்டியது தானா? என்று எண்ணி யாரும் வருத்தப்படவேண்டியது இல்லை. நமது முன்னோர்கள் அதற்கும் நல்ல தீர்வு வைத்திருக்கிறார்கள் அந்த தீர்வின் அற்புதமான பெயர் சரஸ்வதி அஞ்சனம்.

இந்த சரஸ்வதி அஞ்சனத்தை தாயத்தாக செய்து  படிப்பவர்கள் அணிந்துவந்தால்  நினைவாற்றல் பெருகும். தேர்வு நேரத்தில் படபடப்பு வராது. படித்ததை நிதானமாக யூகித்து எழுத முடியும். படிப்பிற்காக ஏற்படும் தடைகள், உடல் கோளாறுகள் அனைத்தையும் தீர்க்கும். காரணம் இந்த சரஸ்வதி தாயத்தை புனிதமான மூலிகைகளால் பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்துபவர்களுக்கு ஈர்த்து தரும் தெய்வீக சக்தி படைத்ததாக இருக்கிறது. 

குழந்தைகள், பெரியவர்கள், ஆண் - பெண் என்ற பேதமின்றி கல்வி கற்கும் அனைவரும் இதை பயன்படுத்தலாம். பதவி உயர்வுக்காக பரிட்சை எழுதுபவர்களுக்கு கூட இது பயன்படும். இத்தகைய அபூர்வ அஞ்சனம் உங்களுக்காக காத்திருக்கிறது.

இதை சுலபமான முறையில் நீங்கள் பெறுவதற்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நமது முன்னோர்களின் திறமையை நீங்கள் நேரடியாக புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக அவர்களது அறிவாற்றலை பயன்படுத்தி நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே எந்தவிதமான இடைஞ்சலும் இன்றி உங்களுக்கு தரத்தயாராக இருக்கிறோம்.

சரஸ்வதி தாயத்தை நீங்கள் பெறுவதற்கு உங்களது பெயர், தந்தை பெயர் மற்றும் தந்தை வழி தாத்தா பெயர் இவற்றை தபாலில் இணைத்து இந்திய ரூபாய் 500/- காணிக்கையை அனுப்பி காணிக்கையை நீங்கள் அனுப்பிய விதம் மற்றும்  அதற்கான அத்தாட்சியையும் இணைத்து அனுப்புங்கள்.

இது சம்மந்தமான விபரங்களை தயவு செய்து மின்னஞ்சலில் அனுப்பாதீர்கள். தபால் வழியாகவே அனுப்புங்கள். மின்னஞ்சலில் நீங்கள் அனுப்பும் விபரங்களை ஏற்றுக்கொள்ள இயலாது. உங்கள் தபால் கிடைத்த ஒருமாதத்திற்குள் தாயத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-


(Cheque) அல்லது (D.D)  Guruji  என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும் 

வங்கி முகவரி :-

                    Name : Balu Guruji                    
                    Account Number : 228801500160                    
                    IFSC Code : ICIC0002288                    
                    ICICI BANK LTD,                    
                    VENGUR branch

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:-

Guruji
4/76 c Kamaraj Road,  
Arakandanallur -  605752
Tirukoilur  (Tk),
villupuram (Dt),
Tamilnadu,

Cell No:- +91-9442426434, 
               


இப்படிக்கு 


குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை


  ன்னிடம் அடிக்கடி ஒரு இளைஞன் வருவான், வறுமையான சூழலில் அவன் பிறந்திருந்தாலும் வறுமையை கொஞ்சம் கூட வெளிக்காட்டாத அவன் பேச்சுத் தோரணை எனக்கு ரொம்ப பிடிக்கும், எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை அவனிடம் சொன்னாலும் முகம் சுளிக்காமல் எத்தகைய சிரமத்தையும் தாண்டி அந்த வேலையை முடித்து விடுவான்,

  ஒருநாள் அவனிடம் நான் தனியாக பேச நேரிட்டது, அப்போது தான் அவன் மனதுக்குள் கிடந்த அத்தனை ஆசை. அபிலாஷைகளை என்னிடம் கொட்டித் தீர்த்தான், தான் கிராமத்தலையாரியின் மகன் என்பதையும். தனக்கு மிகச்சிறிய வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என்பதையும் என்னிடம் சொல்லி நான் எப்படியும் அரசியலில் பெரிய தலைவராக ஆக வேண்டும் என்றும் அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான்,

அவன் ஜாதகம் உட்பட அனைத்தையும் நான் பரிசோதித்து பார்த்தேன், அவன் அரசியல் தலைவராவதற்கான எந்தவித சாத்தியக்கூறும் இல்லையென்பதை தெளிவாக புரிந்து கொண்டேன், இருப்பினும் சில பொதுவேலைகளில் அவன் காட்டிய சிரமத்தையும். தாங்கிக் கொண்ட துயரமும் அவனுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மிக ஆழமாக வேர்விட்டு விட்டது,


   அந்த நேரத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிப்பும் வந்தது, அந்த இளைஞனை அழைத்து ஒரு வசிய அஞ்ஜன தாயத்தை கட்டிக்கொள்ள கொடுத்தேன், ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரைச்சொல்லி அந்தக் கட்சியின் மாவட்ட பொறுப்பிலிருப்பவரை போய் பார், கட்சியில் சீட்டு கிடைக்கும். தேர்தலிலும் வெற்றி பெறுவாய், ஆனால் மிகக்கடினமாய் உழைப்பு இருக்கும் என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தேன், அவன் மீண்டும் என்னை வந்து பார்த்தபோது ஒன்றியக் கவுன்சிலராக தான் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிச்செய்தியுடன் வந்தான், அப்பொழுதுதான் அஞ்ஜனங்களுக்கு இருக்கின்ற முழு சக்தியை நான் உணர்ந்து கொண்டேன், குடும்பத்திலோ. அரசியலிலோ. பொருளாதார பலத்திலோ. ஏன்? ஜாதக அமைப்பிலும் கூட எந்த விதமான பின்பலமும் இல்லாமல் வெறும் மந்திரம். அஞ்ஜனம் இவைகளால் ஒரு நரியையும் பரியாக்கிவிடலாம் என்ற ஆண்டவனின் அனுக்கிரக சக்தியை எண்ணி வியக்காமல் என்ன செய்ய முடியும்,

அப்படி அந்த இளைஞனுக்கு என்ன அஞ்ஜனம் கொடுத்தேன் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது, அவனுக்கு நான் கொடுத்தது ஸ்ரீ மகாலஷ்மி அஞ்ஜனமாகும்,


      இந்த மகாலாஷ்மி அஞ்ஜனம் நம்மை சகல கிரக தோஷ உபாதையிலிருந்தும் விடுவித்து இஷ்ட சித்தி ஏற்படுத்தித்தரும், மேலும் தொழில் மேன்மை. தனசமர்த்தி. புகழ். பதவி. அனுகூலம். வியாபாரம். உத்தியோகம் ஆகிய எல்லாத்துறைகளாலும் தனலாபத்தையும். மன ஆசைகளையும் மிக சுலபமாக நாம் அடைய வழிவகை செய்யும், துர்மரணம். தீய ஆவிகளின் தொல்லை. செய்வினை தோஷம். முன்னோர்களின் சாபம். கர்ம வியாதி ஆகிய சகலமும் இந்த அஞ்ஜனத்தால் தீரும், இதில் உள்ள மகாவிஜயதன ஆகர்ஷன மூலிகையின் மகிமை பணம். பதவி ஆகியவற்றை ஈர்த்துத்தர வல்லது, இதை எந்த வயதினரும் எந்த பாலினரும். எந்த மதத்தினரும் உபயோகப்படுத்தலாம்,

  இந்த அஞ்ஜனம் செய்ய கரும் துளசி. வேர். நீர். சாம்பிராணி இலை. வெண் தாமரைக்கொடி. சந்தன இலை. அதிமதுரவேர் ஆகிய ஐந்து பொருட்கûளுயம் சமபங்காக எடுத்துக்கொண்டு

“ஹரீ - ஓம் - மகா - தேவீ - மகா
லட்சுமி - சர்வ - மங்கள -
பிரதயினி - மம - பிரயத்தன -
காரிய சித்தி -”


   என்ற மந்திரத்தை 1008 தடவை பௌர்ணமி தினம் சந்திரோதய சமயம் கிழக்கு முகமாக உட்கார்ந்து ஜபம் செய்து பின் மேற்படி குறிப்பிட்ட ஐந்து பொருட்களையும் புது மண்சட்டியில் அத்திமர சமித்தால் நெருப்பு ஏற்படுத்தி ஒவ்வொரு பொருளாக போட்டு கரியாக்கி நன்றாக தூள் செய்து தனியாக எடுத்துக் கொண்டு பசு நெய்யில் கலந்து வெண்ணைபோல் உருட்டிக்கொள்ள வேண்டும்,


  பின்பு சாம்பிராணி எண்ணெய். சந்தன எண்ணெய். அசல் வேப்பம் எண்ணெய். கடுகு எண்ணெய். வசம்பு எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை சமமாக கலந்து முன்சொன்ன மூலிகை சாம்பல் உருண்டையை கொட்டி கலந்து வெள்ளி அல்லது பீங்கான் கிண்ணியில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,
பின்னர்

“ஹரி - ஓம் - மாக - தேவீ -
மகா - லட்சுமி - ஓம் - ஸ்ரீம் - க்லீம் -
ஹரீம் - ஸ்ரீம் - ஆகச்சா -
ஆகச்சா -
மம - மந்திரே - திருஷ்டத் -
திருஷ்டத் - ஸ்வாஹா”


  என்ற மூல மந்திரத்தை நாற்பத்தெட்டு தினங்கள் சந்தியாவந்தன நேரத்தில் வடக்கு முகமாக உட்கார்ந்து தினசரி 2016 தடவைகள் ஜபம் செய்து அஞ்ஜனத்தில் ஊதிவிடவும் இதேபோல் நாற்பத்தெட்டு நாள் செய்து நாற்பத்தொன்பதாம் நாள் ஐந்து அம்மன் கோவில் சென்று அம்மனை தரிசனம் செய்து பின்னர் அஞ்ஜனத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்,    இதேபோன்று சரஸ்வதி அஞ்ஜனம் என்று ஒன்று உள்ளது, இதை மை போலவும் உபயோகம் செய்யலாம், சாம்பிராணி போல்  தூபம் போட்டு வாசனையும் பிடிக்கலாம், இதனால் ஞாபகமறதி. சபைக்கூச்சம். திக்குவாய். படிப்பில் ஊக்கமின்மை. தொழில் சிறத்தையின்மை. குரல் வியாதிகள் விலகும்,
இது செய்ய தேவையான பொருட்கள் கருந்துளசி வேர். ஜாண்டு காய்கள். நெறிஞ்சி  முள். வாலாட்டி மர இலை. வேப்பம்பழம். யானை வணங்கி வேர். பலாவேர். தொட்டாசுருங்கி வேர். மாதுரை இலை. கருவேம்புச்சாறு. சீந்தல் கொடி. நன்னாரித்தூள். விஷ்ணுகிரந்தி இலை. சிவகிரந்தி இலை. பிரம்ம பத்திரம்.
வாதநாராயணப்பட்டை. மருதம்பட்டை. சீகத்துக்காய்தூள். இலவஞ்சிக்கொடி. கடலைச் செடியின் வேர் ஆகிய இருபது மூலிகைகளையும் நிழலில் தனித்தனியாக உலர்த்தி சமஎடை எடுத்து இடித்து நன்றாக தூள் செய்து விபூதி பக்குவமாக்கி அத்துடன் இருநூறு கிராம் கற்பூரத்தை பொடி செய்து பசங்கன்று குட்டியின் சாணத்தில் பிசைந்து அதனுள் மேற்படி மூலிகைப்பொருட்களை கொழுக்கட்டையில் பூரணம் வைப்பது போல் வைத்து உருட்டி ஒன்பது நாட்கள் வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,  10-ஆம் நாள் சரஸ்வதியை தியானித்து காயவைத்து சாணி உருண்டைகளை எடுத்து ஒரு அகலமான பானை ஓட்டில் வைத்து கற்பூரம் சந்தனக்குச்சிகளைக்  கொண்டு நெருப்பிலிட்டு அசல் விபூதியைப்போல் ஆக்கிக் கொள்ளவேண்டும், இந்த விபூதியை 1/4 கிலோ சாம்பிராணி எண்ணெயில் கலந்து கிளறி அத்துடன் ஜவ்வாது. கஸ்தூரி. குங்குமப்பூ. சந்தன எண்ணெய் இவைகளை விட்டு பிசைந்து அஞ்ஜனமாக்கிக் கொள்ள வேண்டும், பின்னர்.

“ஹரி - ஓம் - ஐம் - வேதகாரோ -
மந்த்ரகாரோ - வித்வாந் - ஸமர -
மர்தந - மஹா - மோக - நிவாஸீ -
ச மஹாகோரோ - வசீகர -”


   என்ற மூல மந்திரத்தை தினசரி 82 வீதம் 82 நாளைக்கு சொல்லி அஞ்சனத்தில் ஊதிவிட வேண்டும், அதன்பிறகு புருவங்களுக்கு மத்தியில் இந்த அஞ்ஜனத்தை பொட்டாக இட்டுக் கொண்டாலே நினைவு ஆற்றல் பெருகும், சரஸ்தி தேவியின் பரிபூரண கிருபையால் அபாரமான அறிவு ஒளி வீசும்,
இப்படி மஹா நிவர்த்தி அஞ்ஜனம். சர்ப அஞ்ஜனம். பாலாரிஷ். தோஷ நிவாரண அஞ்ஜனம். சுதர்சன அஞ்ஜனம். வசீகர அஞ்ஜனம். குபேர அஞ்சனம். சர்வசிய அஞ்சனம். அஷ்டமாசித்து மகா அஞ்சனம். பாதாள மூலி அஞ்ஜனம். ஜெயமங்கள் அஞ்ஜனம் போன்று கணக்கிடலங்கா எத்தனையோ அஞ்ஜனங்களை ஏடுகளிலும். பல மகான்களின் அனுபவ அறிவுக்களஞ்சியங்களிலும் தெரிந்தும். தெரியாமலும் மறைந்து கிடக்கின்றன,  அவைகளை எல்லாம் வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை துடைத்து நல்ல வாழ்க்கையை நாம் கொடுக்கலாம், ஆனால் இன்று நிலைமை என்ன?


மகாலக்ஷ்மி அஞ்சனம் வேண்டும் என்பவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை


    னது நண்பர் ஒருவருக்கு ஹோட்டல் தொழிலில் நல்ல அனுபவம் உண்டு.  தனது சொந்த ஊருக்கு அருகிலுள்ள சிறிய நகரம் ஒன்றில் பத்து வருட காலமாக ஹோட்டல் நடத்தியும் வந்தார்.  அவருக்கு திடிரென்று ஒரு ஆசை.  சிறிய அளவிலாவது சென்னையில் ஓட்டல் ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.  நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றியது.  தனது கையில் இருந்த காசு போதாது என்று சொந்தமான தோட்டம் ஒன்றை விற்றார்.  அப்படியும் குறைந்த பணத்திற்கு மனைவி மக்களுடைய நகைகளை விற்று சென்னையில் ஜன நடமாட்டமுடைய முக்கிய வீதியில் தொழிலையும் ஆரம்பித்து விட்டார்.

ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்கு வியாபாரம் நல்ல நிலையிலேயே நடந்தது.  பிறகு நாள் ஆக ஆக குறைய ஆரம்பித்து விட்டது.  சில நாட்களில் தயார் செய்த உணவு பொருட்களை கீழே கொட்ட வேண்டிய நிலையும் உருவாகிவிட்டது.  ஒரு வேளை உணவு தரமில்லாமலோ, சுவையில்லாமலோ இருக்குமோ என்று யோசித்தார்.  சோதித்து பார்த்ததில் அப்படியொரு குறையும் இல்லை.  இந்த ஓட்டலில் அருகிலுள்ள மற்ற ஓட்டல்களில் சுவையும் தரமும் குறைவாக இருந்த போதும் கூட அங்கு வியாபாரம் விறு விறு என்று நடந்து கொண்டிருந்தது.  தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட வழியில்லாமல்.  பல நேரம் கஷ்டப்பட்டார்.


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக சென்னை மீது கொண்ட மோகத்தால் சொந்த ஊர் வியாபாரத்தையும் கெடுத்து விட்டோமே என்று வருத்தப்பட்டார்.  ஊரில் இவரது மனைவி பல ஜோதிடர்களிடம் சென்று ஆலோசனை கேட்டு ஆறுதல் சொன்னாரே தவிர அனுபவத்தில் எந்த நன்மையும் அவரால் அடைய முடியவில்லை.  இவரும் தனக்கு தெரிந்த எல்லா வகையிலும் முட்டி மோதி பார்த்தார்.  ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

 நிலைமை நாளுக்கு நாள் விபரீதமாகி கொண்டிருந்ததே தவிர துளியளவும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  ஓட்டல் வைத்திருக்கின்ற இடம் வாஸ்துபடி சரியாக இருக்காதோ என்ற சந்தேகத்தில் சிலரை அனுகி ஆலோசனை பெற்று அவர்கள் சொல்படியும் செய்தார்.  அதன் பிறகு நிலைமையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.  விட்டு போன நம்பிக்கை துளிர்விடவே மிக கடுமையாக உழைத்து நிலைமையை சரிசெய்து விடலாம் என்ற சூழல் வந்த போது வேலைகாரர்கள் சரிவர அமையாமல் கஷ்டம் வேறு வடிவத்தில் தாக்கியிருக்கிறது.


  மளிகை கடை, காய்கறிகடை மற்ற எந்த கடையாக இருந்தாலும் அடிக்கடி தொழிலாளிகள் மாறினால் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது.  ஓரளவு சமாளித்துவிடலாம்.  ஆனால் ஓட்டல் தொழிலை பொறுத்த வரை சிறிது காலத்திற்காவது நிரந்தர தொழிலாளிகள் வேண்டும்.  காரணம் ஒரு நாள் ஒரு சமையல்காரன்.  மறுநாள் வேறொரு சமையல்காரன் என்றால் சமைக்கும் முறையில் மாறுதல் ஏற்பட்டு சுவையும் தரமும் வாடிக்ககையாளர் எதிர்ப்பார்ப்பது போல் இருக்காது.

இன்றைய ஓட்டல்களை பற்றி மிக முக்கியமான விஷயத்தை சொல்லியாக வேண்டும்.  பல பெரிய ஓட்டல்களில் தமிழ்நாடு முழுவதும் சுவையில் எந்த மாற்றமும் இல்லாமல் செய்கிறார்கள்.  இது எப்படித்தான் சாத்தியமாகிறதோ தெரியவில்லை.  ஒரு நாள் மட்டும் தான் ஓட்டல் சாப்பாடு என்றால் சமாளித்து விடலாம்.  பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடும் போது சலிப்பு தட்டுவது மட்டுமல்ல நாக்கிலுள்ள சுவை நரம்புகளே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விடுகிறது.

 அப்படி என்ன தான் ஓட்டல் சாதத்தில் கலப்பார்களோ தெரியவில்லை.  வெள்ளை வெளேரென்று ஊசி மாதிரி சாதம் விரைத்து கொண்டு நிற்கிறது.  இரண்டு பிடி வாயில் வைத்தாலே வயிறு நிரம்பியது போல் உப்பி விடுகிறது.  எழுந்து கை கழுவதற்குள் மீண்டும் பசிக்கிறது. இந்த சாதத்தையே மாத கணக்கில் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றில் அல்சர் மட்டுமல்ல குடல் புற்று நோயே வந்தாலும் வந்துவிடும்.  அந்தளவிற்கு மோசமாக உள்ளது  


பெரிய ஓட்டல்களின் நிலைமை இப்படியென்றால் சிறிய ஓட்டல்களை பற்றி கேட்க வேண்டாம்.  எத்தனை முறையோ அடுப்பில் ஏற்றி இறக்கிய எண்ணெயில் தான் சமையலே செய்கிறார்கள்.  பொரியல் என்ற பெயரில் வைக்கும் முட்டைகோஸ், உருளைகிழங்கு போன்றவைகளில் அழுகிய நாற்றம் பச்சையாகவே வீசுகிறது.  இது தமிழ் நாடு முழுவதும் இருக்கின்ற ஓட்டல்களின் சாபக்கேடு.  மற்ற மாநிலங்களை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது.  ஏறக்குறைய இப்படியே தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஓரளவேணும் நிரந்தர தொழிலாளிகள் அமைந்து விட்டால் பொருட்களின் சுவையை சற்றேணும் நிலை நிறுத்தலாம் என்று ஓட்டல் தொழிலில் அனுபவம் உள்ளவர்கள் கருதுகிறார்கள்.  வீடுகளில் விளம்பரம் இல்லாமல் நடைபெற்று கொண்டு இருக்கின்ற மெஸ்கள் ஓரளவு சுவையுடையதாக இருப்பதற்கு காரணமும் இது தான்.

 நமது நண்பரும் தொழிலாளர்கள் சரிவர அமையாத பல இடர்பாடுகள் உருவானவுடன் மீண்டும் கலங்கி போய்விட்டார்.  ஆனாலும் தொழில் மீது அவர் கொண்டுள்ள வெறி அடங்கவே இல்லை.  வெற்றி பெறும் வரை போராடுவது என முடிவு செய்துவிட்டார்.  ஒரு வேளைக்கு குறிப்பிட்ட தொழிலாளி வராத போது அதை தானே செய்ய துவங்கினார்.  அப்படியும் சிரமம் ஏற்பட்ட போது ஊரிலிருந்து குடும்பத்தினரை வரவழைத்து வேலையை செய்ய சொன்னார். 


சமையல் வேலையிலிருந்து சப்ளையர் வேலை வரை அவர்களே செய்தனர்.  இந்த நிலையில் தான் வியாபாரத்திற்கு நிறைய வாடிக்கையாளர்களை வரவழைக்கும் வசிய அஞ்ஞனத்ததை கேள்விப்பட்டு இருக்கிறார்.  அது சம்பந்தமாக என்னிடம் பேசவும் செய்தார்.

அவரை நேரில் வரச்சொல்லி என்னிடம் இருந்த அந்த அஞ்ஞனத்ததை கொடுத்து அனுப்பினேன்.  சந்தோஷத்தோடு வாங்கி சென்ற அவர் ஐந்து மாதம் கழித்து அதை விட பன்மடங்கு சந்தோஷத்தோடு வந்தார்.  ஆரம்பித்த போது வியாபாரம் எப்படி சுறுசுறுப்பாக நடந்ததோ அதே போல இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது.  மேலும் அடிக்கடி ஓடிப்போன வேலைக்காரர்கள் இப்போது அப்படி செய்வதில்லை.  அப்படியே வேலை வேண்டாம் என போவதாக இருந்தாலும் குறைந்தபட்சம் பத்து நாளுக்கு முன்பு சொல்லி விடுவதினால் சமாளித்து கொள்ள முடிகிறது என்று சொன்னார்.  எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.  நமது முன்னோர்கள் கடைபிடித்த பல விஷயங்கள் இன்றைய வாழ்க்கையில் கூட நல்ல பலனை தருகிறதே என்பதை எண்ணி பார்க்கும் போது அவர்களின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

 இந்த தொழில் வசிய அஞ்ஞனத்தில் வாடிக்கையாளர்களை மட்டும் வசிகரம் செய்யலாம் என்பது அல்ல.  வியாபாரத்தில் ஏற்படும் சின்ன சின்ன இடஞ்சல்கள், திருட்டுகள் போன்றவற்றையும் நீக்கி கொள்ளலாம்.  அதே நேரம் யாரிடமும் நாம் ஏமாந்து போகாமல் ஏமாற்றுகாரர்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ளும், விழிப்புணர்வையும் பங்கு சந்தையில் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளையும் நாம் உணர்ந்து தப்பி கொள்ள இந்த அஞ்ஞனம் உதவி செய்கிறது.

 இதை செய்வதற்கு பல அரிதான மூலிகைகள் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதினால் செலவு சற்று அதிகமே தவிர மற்றப்படி பலன் என்னவோ சர்வ நிச்சயமானது.  இந்த அஞ்ஞனம் செய்யும் முறையை திருவநனந்தபுரம் நாராயண பணிக்கரிடம் நான் கற்றுக் கொண்டேன்.  அவருடைய கட்டளைப்படி செய்யும் முறையை பகிரங்கமாக எழுத கூடாது என்பதினால் தேவைப்படுபவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டால் சொல்லித்தர கடமைப்பட்டுள்ளேன்.


மகாலக்ஷ்மி அஞ்சனம் வேண்டும் என்பவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


கடலை தாண்ட வைக்கும் மூலிகை

  யல்நாடுகளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனிதராக பிறந்த அனைவருக்கும் உண்டு. எல்லாதரப்பு மக்களிடமும் இத்தகைய ஆவல் பொதுவாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் உண்டு. தெரியாததை தெரிந்து கொள்ள வேண்டும் புதுமையான அனுபவங்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தை பருவம் முதலே மனிதனுக்கு இயற்கையாக அமைந்து இருக்கிறது.

 இந்த எண்ணம் தான் மனிதனை கடலை கடக்க செய்தது. காற்றில் ஏறி விண்ணை சாடசெய்தது. மிக பழைய காலத்தில் அயல்நாட்டு பயணன் என்பது மிக முக்கியமான மூன்று அம்சங்களை கொண்டு இருந்தது.

 முதலாவதாக பல்துறை அறிவு விஷயங்களை தேடி பெறுவதற்கும் இரண்டாவதாக அந்நிய பொருட்களை உள்நாட்டில் இறக்குமதி செய்வதற்கும், உள்நாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் மூன்றாவதாக ராணுவ நடவடிக்கைகளுக்கும் இருந்தது.


  நாள் செல்ல செல்லதான் அயல்நாட்டிற்கு சென்று பணியாற்றுகின்ற வழக்கம் வந்தது. நமது தமிழர்களை பொறுத்தவரை தூரதேச பயணம் என்பது ஆண்டாண்டு காலமாக ரத்ததில் ஊறிய விஷயமாகும். நகரத்தார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற தமிழ் மரபினர் வெளிநாடு சென்று தாய் தமிழகத்திற்கு கொண்டு வந்த பொக்கிஷங்கள் எண்ணற்றவைகளாகும்.

 கொண்டு வந்தது மட்டுமல்ல நம்மூர் கலாச்சார சிறப்பை பல நாடுகளிலும் பரப்பினார்கள் என்று சொல்லவேண்டும். பர்மா,இந்தோனேசியா,மலயா மற்றும் சிங்கப்பூரில் தமிழ் பண்பாடு ஒளிமையமாக திகழ்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நகரத்தார்களே ஆகும்.

நகரத்தார்களை பார்த்தே மற்ற இன மக்களும் அயல்நாட்டு பயணத்தால் தங்களது பொருளாதார பலத்தை அதிகரித்துக் கொள்ள வெளிநாடு செல்ல விருபினார்கள். இந்தியா சுகந்திரம் அடைவதற்கு முன் தமிழகத்தில் வடபகுதி மக்கள் பர்மா நாட்டில் பெருவாரியான தொழில்களை செய்தனர். அதே போலவே தென்தமிழக மக்களின் பெருவாரியான தொழிலாளிகளும், வியாபாரிகளும் இலங்கை நாட்டை நாடி சென்றனர். 


கொழும்பு நகரில் தமிழக வியாபாரிகளின் செல்வாக்கு இன்றும் அதிகமாக இருப்பதற்கு இதுவே மூலகாரணமாகும். ஆனால் இன்றைய தமிழ் மக்கள் பர்மாவையும் இலங்கையையும் விரும்புவதை விட்டுவிட்டனர். சில காலங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளின் மீது இருந்த ஆர்வம் கூட குறைந்துவிட்டது.

 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் மற்றும் வேலை செய்யவே பல தமிழர்கள் விரும்புகிறார்கள். நன்றாக படித்து ஒரளவு விவரம் தெரிந்தவர்களாக இருக்கும் சில தமிழர்கள் அமெரிக்கா சென்று  5,00,000 சம்பளம் வாங்குவதை விட ஆவடியில் இருந்து 50,000 சம்பளம் வாங்குவது மேல் என்கிறார்கள்.

அவர்கள் அப்படி நினைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை ஐரோப்பிய நாடுகளில் தங்குவதற்கு இடம் கிடைப்பது மிக பெரிய சிரமம் அப்படியே கிடைத்தாலும் வாடகை மிக அதிகம். பல இடங்களில் இந்திய உணவு விடுதிகள் இருந்தாலும் உணவு பண்டங்களின் விலை சராசரியான மனிதன் சமாளிக்க கூடிய விதத்தில் கிடையாது.

 பலவேலைகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் என்றாலும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு நம்மவர்களின் பணி திருப்தியளிக்கவில்லை என்றால் உடனடியாக வேலையை விட்டு அணுப்பிவிடுவார்கள். அதாவது வேலைக்கு முழு பாதுகாப்பு கிடையாது. இவைகளை எல்லாம் தாண்டி மணைவி மக்களை அழைத்து செல்லவேண்டும் என்றால் எதிர்கொள்ளும் சிரமங்களை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. குடிக்கிற தண்ணிலிருந்து பின்பற்றுகின்ற கலாச்சாரம் வரையிலும் பிரச்சனை  பிரச்சனை பிரச்சனையை தவிர ஒன்றுமே இல்லை.

இந்த மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் அல்லது எதிர்கொண்டு மனம் சலித்து அயல்நாடே வேண்டாம் சாமி சொந்த நாடே சொர்க்கம் என்று சொன்னாலும் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் நபர்கள் அங்கே அனுபவிக்கும் கஷ்டங்களை கதைகதையாய் விவரித்தாலும் அயல்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற மோகம் இன்னும் பலரை விட்டபாடு இல்லை.

 அதற்கு உண்மையான காரணம் என்ன? ஊர் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையா? பல நாட்டு அறிவை தமதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆவலா? இரண்டும் நிச்சயம் இல்லை. திரைகடல் ஒடியும் திரவியம் தேட வேண்டும் என்ற எண்ணம் தான் பலரை உந்தி தள்ளுகிறது.


   வெளிநாடு செல்ல ஆசைபடுவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கிறது. நமது ஜனங்களுக்கு சாதாரண குண்டு ஊசி என்றாலும் கூட அது வெளிநாட்டு பொருள் என்றால் அதன்மீது தனி கவர்ச்சி தான். எனது தகப்பனார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கொழும்பு கடைவீதியில் விற்ற அமெரிக்க தயாரிப்பான ஒரு சிறு விளையாட்டு பொருட்களை வாங்கி வந்து இருக்கிறார். அதை இன்று கூட எனது தாயார் மிக நேர்த்தியாக பாதுகாத்து வருகிறார்.

 அதற்கு என் அப்பா வாங்கி வந்தார் என்பது மட்டுமல்ல, அது மட்டும் தான் காரணம் என்றால் அவர் வாங்கி வந்த மற்ற பொருட்களையும் அதே போல் பாதுகாக்க வேண்டுமெல்லவா? ஆனால் அவைகள் போன இடமே தெரியவில்லை. இது மட்டும் இன்று வரை இருப்பதற்கு U.S.A என்ற எழுத்து இருப்பது தான் வயது வித்தியாசமின்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் இப்பழக்கம் சகஜமாக இருக்கிறது.

பொருட்களுக்கும் மட்டும்தான் மோகம் என்றில்லை அயல்நாட்டு படிப்புக்கு கூட அலாதியான மரியாதை இருக்கிறது.  திருநெல்வேலியில் இருக்கும் நண்பர் ஒருவரின் மகளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வந்தது.  பையன் படித்து தனியாக மருத்துவமனை நிறுவி கை நிறைய சம்பாதிக்கிறான்.  ஆனால் எனது நண்பர் M.S படித்த அந்த மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்காமல் வெறும் M.B.B.S படித்த பையனுக்கு பெண் கொடுத்தார். 


 எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது.  ஏன் M.S படித்த பையனின் குணமோ குடும்பமோ சரியில்லையா? என்று அவரிடம் கேட்டேன்.  அப்படி எல்லாம் ஒன்றுமில்லை இந்த பையன் M.B.B.S  சை ரஷ்யாவில் படித்து இருக்கிறான் என்று பெருமையாக சொன்னார்.  நான் அவரிடம் எதுவும் பேசவில்லை.  ரஷ்யாவின் கல்வி தரம் இந்தியாவின் தரத்தை விட மேம்பட்டது அல்ல என்று எடுத்து சொன்னாலும் அவர் கேட்க போவதில்லை.  நம்மை தான் பைத்தியகாரன் என்பார் .

இவர் மட்டுமல்ல இவரை போல ஏராளமான மனிதர்கள் வெளிநாட்டு படிப்பை சந்திரனனிலிருந்து எடுத்து வந்த கல்லை போல அபுர்வமாகவும், ஆச்சர்யமாகவும் பார்க்கிறார்கள்.  மூலகடையில் விற்கும் எட்டணா முறுக்கு கூட அமெரிக்காவில் இருந்து வந்தது என்று சொன்னால் பத்து நிமிடத்தில் விற்று தீர்ந்து விடும்.  அந்தளவிற்கு அயல்நாட்டு மோகம் நமது ஜனங்களை பிடித்து ஆட்டுகிறது.

அம்மனமாய் அலையும் ஊரில் வேட்டி கட்டியவன் மடையன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.  அதே போலத்தான் வெளிநாடு சென்று மான் பிடிப்பதை விட உள் நாட்டில் முயல் பிடிப்பது மேல் என்று மக்களிடம் சொன்னால் மனநோய் இருப்பதாக அவர்கள் பேசிக் கொண்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை

 என்னிடம் ஜோதிடம் சம்பந்தமாக கேள்வி கேட்க்கும் பல பெற்றொர்கள் தங்கள் பிள்ளைக்கு திருமணமாகுமா? குழந்தை பிறக்குமா? சொத்து சுகம் வாங்க முடியுமா? என்று கேட்பது கூடவே பையன் வெளிநாட்டுக்கு போவானா? என்பதை கேட்பதற்கு மறப்பதேயில்லை.

 ஆமாம் கண்டிப்பாக செல்வான் என்று நாம் சொல்லி விட்டால் அவர்கள் முகத்தில் தெரியும் பாருங்கள் ஒரு ஆனந்தம் பிரகாசம் அதன் அழகே அழகு, இந்த இடத்தில் நான் சொல்லப் போகும் விஷயம் தேவையற்றது என்றாலும் சொன்னால் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன்.  பையன் வெளிநாட்டுக்கு போவானா என்று கேட்க்கும் எவரும் என் மகளுக்கு வெளிநாட்டு யோகம் உண்டா என்றோ மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வானா என்றோ கேட்பதே இல்லை.  அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாவிட்டாலும் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

நிறைய இளைஞர்கள் வெளிநாடு செல்ல விரும்புவது பணம் சம்பாதிக்கத்தான் என்றாலும் அவர்களது விருப்பம் தவறு என்று நம்மால் சொல்ல முடியாது.  ராமாவரம் ஏரிக்குள் பழைய இரும்பு கடை வைத்திருப்பவன் கூட பெண்  தேட ஆரம்பித்து விட்டால் ஐம்பது சவரன் போட முடியுமா? என்று கேட்கிறான். இன்று அத்தியாவசிய பொருளாகிவிட்ட சாதாரண கிரைண்டர், மிக்ஸி கூட ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்தால் தான் வாங்க முடிகிறது.  ஒட்டு குடித்தனம் நடத்தும் ஒரு சிறிய வீட்டிற்கு வாடகை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.  மளிகை பொருள், காய்கறி இவற்றின் விலை தினசரி ஏறுகிறது.


  இந்த நிலையில் சராசரி மனிதனுக்கு பணம் என்பது தவிர்க்கவே முடியாத தேவையாகிவிட்டது.  எப்படியாவது எந்த வகையிலாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  திருட வேண்டும், ஏமாற்ற வேண்டும், சட்டத்தை மீற வேண்டும் என்று நினைக்காமல் வெளி நாடு சென்றாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

அயல் நாடுகளில் சென்ற சம்பாதிப்பதில் ஒரு நல்ல அம்சமும் இருக்கிறது.  வெளிநாடு சென்று வந்த ஒருவர் ஐந்து வருடமோ, பத்து வருடமோ சிரமமாக இருந்தாலும் அதை தாங்கி கொண்டு நாலு காசு சம்பாதித்து தாய் நாட்டிற்கு வந்தால் எதாவது ஒரு சுய தொழிலை செய்யலாம் அல்லது இருப்பதை வைத்து செட்டும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி போய் விடலாம்.  என்றார்.

அவர் கூற்று சரியானதது தான்.  சோம்பேறித்தனமாக சேமிப்பை செலவழித்துக் கொண்டு இருக்காமல் சுயத் தொழில் தொடங்கி நடத்தலாம் என்பது வரவேற்க தக்க விஷயம் தான்.  ஆனால் இது எத்தனை பேரால் முடிகிறது.  சம்பாதித்த பணமெல்லாம் பிள்ளைகளின் திருமணத்திற்கும் படிப்பிற்கும் செலவழித்துவிட்டு வெறுங்கையாய் இருப்பவர்கள் எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனாலும் ஒரு ஆறுதல் அவைகளையாவது அவர்களால் செய்ய முடிகிறதே என்பது தான்.


என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்.  அந்த காலத்தில் நகரத்தார்கள் மிக சுலபமாக அயல்நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்து இருக்கிறார்கள்.  அத்தகைய வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்தவர்கள் மிக குறைவு.  சுலபமாக வெளிநாடு செல்லவும் அங்கு சம்பாதிக்கவும் தங்களது மூளை உழைப்பை தவிர வேறு எதையாவது அவர்கள் பயன்படுத்தினார்களா?

 நண்பரின் இந்த கேள்விக்கு தெளிவான பதில் சொல்ல அப்போது என்னிடம் எந்த விவரங்களும் கிடையாது.  ஆனாலும் அந்தகேள்வி என் மனதிற்குள் ஒரு பகுதியில் விடை தெரிவதற்காக பதுங்கியிருந்தது.  ஒரு சமயம் திருவண்ணாமலையில் இருந்து என்னை காண வந்த ஒரு சாது அந்த கால செட்டிமார்கள் அயல் நாட்டு பிராயாணம் வெற்றிகரமாக அமைய அபூர்வ மூலிகைகளால் ஆன அஞ்சனங்களை பயன்படுத்தினார்கள் என்ற ஒரு தகவலை தந்தார்.  ஆனால் அவருக்கு அதைப்பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை.  அப்படியொரு குறிப்புகள் நிச்சயம் பழங்கால சுவடிகளில் இருக்குமென்று சில காலம் தேடிப்பார்த்தேன்.  எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.

சில அபூர்வமான மூலிகைகளை ஒரு வனவாசி பெரியவர் என்னிடம் கொண்டு தருவார்.  காட்டில் சிரமப்பட்டு தேடியெடுக்க வேண்டிய பொருள் என்பதினால் அவைகளுக்கு அவர் அதிகப்படியான பணத்தை எதிர்ப்பார்ப்பார்.  ஆனால் அவரிடம் இருந்து பெறுகிற பொருள் மிக சுத்தமானதாக இருக்கும்.  அவர் ஒரு முறை பேச்சுவாக்கில் என்னிடம் கடல் தாண்டும் மூலிகை இருக்கிறது வேண்டுமா?  என்று கேட்டார். 

  நான் விவரம் தெரியாமல் என்னவென்று கேட்டேன்.  அதற்கு அவர் இது தெரியாதா சாமி?  அந்த காலத்தில் செட்டியாருங்க இந்த மூலிகையால் செய்த அஞ்சனத்தை தங்களோடு எடுத்து போவார்கள்.  இது கையில் இருந்தால் அயல் நாட்டு தொழிலில் சிக்கல் வராது.  அபாயமும் கிட்டே நெருங்காது.  கையில் காசும் சேரும் அயல் நாட்டில் செய்யும் தொழில்களில் ஏற்ப்படும் சிக்கல்களும் தீரும் என்று சொன்னதோடு இல்லாமல் இன்று வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்பி செல்ல முடியாமல் இருப்பவர்களும் இதை பயன்படுத்தலாம் என்ற தகவலையும் தந்தார்.

எனக்கு தெரியாத விஷயத்தை தெரியாது என்று ஒத்து கொள்வதில் நான் எப்போதுமே தயங்கியது கிடையாது.  அதனால் அவரிடம்  அந்த மூலிகையை வெறுமனே வாங்கி வைத்து நான் என்ன செய்ய போகிறேன், அதை வைத்து எனக்கு அஞ்சனம் செய்ய வழி தெரியாதே என்று கேட்டேன்.  அவர் எனக்கும் தெரியாது.  ஆனால் ஒரு பெரியவர் இருக்கிறார்.  அவருக்கு பணம்கொடுத்தால் நிச்சயம் சொல்லித் தருவார்.  வேண்டுமானால் அவரை கூட்டி வரட்டுமா? என்றார் அந்த பெரியவரை வரச்சொல்லி அந்த அஞ்சனம் செய்யும் முறையை கற்றுக் கொண்டேன்.

அதை இந்த பதிவின் மூலம் நாலு பேருக்கு தெரிய செய்தால் பலருக்கு உதவியாக இருக்குமே என்பதற்காக பகீரங்கமாக எழுத விரும்புகிறேன்.  சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வலம்புரி காய், இடம்புரிகாய், தான்றிகாய், கடுக்காய், ஆகாய தாமரை, வெட்டி வேர், சாரனை வேர், அகில் கட்டை, சந்தன கட்டை, தேவதாறு கட்டை போன்றவைகளை வாங்கி கற்பூரத்தில் வைத்து எரித்து சாம்பலாக்க வேண்டும்.

   அந்த சாம்பலை பயிறுகள் திரிக்கும் கல் எந்திரத்தில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.  பின்னர் பட்டுப் போல் சலித்து சுத்தமான நல்லெண்ணையில் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி காலை வெய்யிலில் உலர்த்த வேண்டும்.  அப்படி உலர்த்திய பிறகு அந்த உருண்டைகளை மீண்டும் கற்பூரத்தில் எரித்து சாம்பலாக்கி வெண்கல கிண்ணத்தில் சேமித்து  கொள்ள வேண்டும்.

அந்த வெண்கல கிண்ணத்தை பூஜையறையில் விநாயகருக்கு முன்பு வைத்து ஓம் கங் கணபதியே நமஹ என்ற மூல மந்திரத்தை காலை வேளையில் 1008 முறை ஜெபிக்க வேண்டும்.  இப்படி தொடர்ச்சியாக 45 நாள் ஜெபித்து மந்திரத்தை உரு ஏற்ற வேண்டும்.  இந்த மந்திர உருவேற்று நடக்கும் நாளில் கண்டிப்பாக மாமிச போஜனம் கூடாது.  பிரம்மசரியத்தை வலுவாக கடைபிடிக்க வேண்டும்.  இந்த விஷயத்தில் நீக்கு போக்காக நடந்து கொண்டால் நிச்சயம் பலன் இருக்காது.  மேலும் ஜனன மரண தீட்டுக்களை தவிர்க்க வேண்டும்.  நாப்பத்தைந்து நாள் உருவேற்றிய பிறகு வெண்கல கிண்ணத்தில் இருக்கும் மூலிகை சாம்பலை சுத்தமான பசு நெய், சந்தன எண்ணெய் முதலியவற்றில் கலந்து மை போல அரைக்க வேண்டும்.  அப்படி அரைக்கும் போது ஓம் யங் சங் கீலிம் கும்பட் ஸ்வாஹ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே அரைக்க வேண்டும்.

அப்படி அரைத்த முடித்த பிறகு சாம்பலை வழித்து எடுத்து வெண்கல கிண்ணத்தில் வைத்துக் கொண்டு பூத வேதாள உப்பு, கன எருமை விருச்ச பால், மதிமயக்கிவேர் போன்றவற்றை கலந்து ஒரு வெண்கல தட்டு எடுத்து கிண்ணத்தை காற்று புகாமல் மூடி வாழை மரத்து அடியில் புதைத்து விட வேண்டும். 45 நாள் அது புதைக்கப்பட வேண்டும். அந்த நாளில் வாழை மரத்திற்கு கொடுக்கும் தண்ணீரில் சற்று மஞ்சள் கலக்க வேண்டும்.


 45 நாட்களுக்கு பிறகு அதை வெளியில் எடுத்து குரு மூலமாக பெற்ற மூல  மந்திரத்தை 25நாட்கள் ஒருமுகப்பட்ட மனத்துடன் உருயேற்றி மீண்டும் பசும்நெய் விட்டு குப்பியில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும். இது நம் கையில் இருந்தாலே தொழில் ரீதியான அயல்நாட்டு பயணம் நம்மை தேடி வரும். தடங்கல் இருந்தால் தானாக விலகும் இது மட்டும் அல்ல அயல்நாடு செல்லாமல் உள்ளுரில் தொழில் நடத்துபவர்கள் கூட இந்த அஞ்சனத்தை பயன் படுத்தி நிறைய செல்வ வளத்தை பெறலாம்

இந்த விஷயத்தை நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் கூட நடக்குமா? இது சாத்தியமா? என்று தோன்றும். இந்த சந்தேகங்கள் ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. ஆனால் இதை சில பேருக்கு செய்து கொடுத்த பிறகு அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நமது முன்னோர்கள் இப்படி பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவைகளை உண்மையன்று நிருபிபதற்கு அனுபவங்களை தவிர வேறு ஆதாரங்கள் இல்லை.


மகாலக்ஷ்மி அஞ்சனம் வேண்டும் என்பவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.மனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை

    
ந்த பெரியவர் சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு பொருள், சிறுவர்களின் கையில் கிடைக்கும் சிறு கூழாங்கற்கள் அவர் உடலை பதம் பார்ப்பதும் உண்டு, மற்றவர்களுக்கு அவர் ஒரு அறுவருப்பு பொக்கிஷம், இடுப்பை மறைக்கும் கிழிந்த சாக்கு. முகத்தை மூடி மறைத்திருக்கும் பெரிய சாடமுடியும். தாடியும். குளித்தே பலவருடமாக அழுக்கில் உரம் ஏறிப்போன உடம்பும். குப்பைகளை வாரி வைத்து முதுகில் தொங்கவிட்டு இருக்கிற பாங்கும் தெருமுனையில் அவர் வந்தவுடன் வீசும் முடைவீச்சும். யாரையும் அவரிடம் அண்ட விடாமல்தான் செய்யும், திடீரென்று  அவர் போடுகின்ற கூச்சலும். பாடுகின்ற பாடலும் மூளை பிளந்து போன பரம்பரை பைத்தியம் என்று பறைசாற்றும். ஊரில் இருக்கின்ற குப்பைகளையெல்லாம் பொறுக்கி எடுத்து பையில் திணித்துக் கொள்ளும் அவரின் ஆவேசம் எல்லோரையும் பயமுறுத்தும்.

    இப்படிப்பட்ட அந்த பைத்தியத்தை அணுகிய மகாகவி பாரதியார். ஏன் இப்படி குப்பைகளை சுமக்கிறாய் என்று கேட்டாரம், அதற்கு அந்த பைத்தியம் முண்டம் முண்டம் நான் வெளியில் சுமக்கிறேன், நீ உள்ளுக்குள் சுமக்கிறாய் என்று கூறியதாம், அப்போதுதான் பாரதியாருக்கு புரிந்து இருக்கிறது, அவர் ஞானப்பித்தன் என்று வெளியில் தெரியும் கோலத்திற்கும் உள்ளுக்குள் இருக்கும் ஞானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அலங்கரிக்கப்பட்ட பூக்களைப் புரட்டிப் பார்த்தால் புழுக்கள் நெளிவதைப் பார்க்கலாம், கலங்கி நிற்கும் சாக்கடையை துழாவினால் தங்கமும் கிடைக்கலாம்.

     நம்மைப்போன்ற சாதாரணர்கள் அலங்காரத்தையும். அழகையும் பார்த்து ஏமாறுகிறோம், கண்முன்னே இருக்கும் அழகான ரோஜா தோட்டத்தை விட்டு விட்டு வானத்திலிருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்கப்போவதாக கனவுகளில் மிதந்து காலத்தை வீணாக்கி கொள்கிறோம், மிக சாதாரண நடப்பில் கூட மிகப்பெரும் விஷயம் அடங்கியிருப்பதை கவனிக்காமல் பல நேரத்தில் ஊதாசினம் செய்து நமது அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகிறோம்,

    நான் ஒரு நாயை 2 நாட்களாக கவனித்து வந்தேன், 2 நாட்களாகவே அந்த நாய் எதுவும் சாப்பிடுவதில்லை, வழக்கமான சுறுசுறுப்பு  அதனிடம் இல்லை, வாய்விட்டு குரைக்கக் கூட. அது யோசனை செய்து கொண்டிருந்தது, மந்தமாக எதையோ சாப்பிடக் கூடாததை சாப்பிட்டு விட்டது போன்று உடலை நெளிப்பதும். வளைப்பதும் சுருண்டு படுப்பதுமாக இருந்தது, 3வது நாள் காலை என்று நினைக்கிறேன் உடைந்த செங்கல்களுக்கு இடையில் முளைத்திருந்த ஏதோ ஒரு செடியை போய் ஆசையுடன் தின்றது, எனக்கு அந்த காட்சி அதிசயமாக இருந்தது, ஆடு. மாடுகள். இலை. தழைகளை தின்பது ஒன்றும் வியப்பல்ல, நாய் தின்பது விந்தையாகவும் விசித்திரமாகவும் இருந்தது, என்ன ஆச்சரியம் சிறிது நேரத்தில் அந்த நாய் வாந்தி எடுத்தது, வாந்தியில் கந்தை சாக்கு பகுதிகளும் வந்து விழுந்தன.
  
     நமக்கு நோய் வந்தால் அந்த நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம், நாம்வளர்க்கும் விலங்குகளுக்கும் கூட நாம் வைத்தியம் பார்க்கிறோம், ஆனால் தானாக பிறந்து வாழ்ந்து முடிந்து போகும் சாதாரண ஜீவன்களான இவைகளும் நோய் வந்தால் மருந்தை தேடும் அறிவை பெற்றிருப்பது இறைவனின் பெருங்கருணையல்லவாõ இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்பதை ஐந்தறிவு ஜீவன்கள்கூட மிக தெளிவாக அறிந்து வைத்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் தானே.
    நாய் தின்ற அந்த செடியை எடுத்து வரச்சொல்லி அதை ஆராய்ந்து பார்த்தேன், அந்த செடியின் பெயர் “தேள் கொடுக்கு இலை” என்பதை புரிந்து கொண்டேன், சாதாரணமாக அந்த தழை கிராமங்களில் தற்கொலை செய்து கொள்ள விஷம் சாப்பிட்டவர்களை வாந்தி எடுக்க வைக்க இதைப் பயன்படுத்துவர், நாய்கள் வாந்தி எடுக்க இந்த தழையை மட்டும் பயன்படுத்துவதில்லை, அருகம்புல்லையும் பயன்படுத்தும். பூனை. குரங்கு முதலியவை இத்தழைகளின் சக்தியை அறிந்து வைத்திருக்கின்றன, மிக சாதாரண விலங்குகளே மூலிகைகளை பயன்படுத்தி நோய்களை நீக்கி கொள்ளும் போது இறைவனின் உயரிய சிருஷ்டியான மனிதன் எந்த அளவு அறிந்து வைத்திருப்பான் என்று எண்ணி வியந்து போனேன்,

   வான வெளியில் சதா சஞ்சரித்துக் கொண்டு இருக்கிற ஒலி அலைகளை மந்திரமாக கண்டறிந்து வெளியிட்ட மனிதன் தனது சரீரத்திற்குள் வியாபித்து இருக்கும் “ஓஜஸ்” சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைக்க தெரிந்த மனிதன் மன சக்தியின் மூலம் இயற்கையின் இயக்கங்களையே கட்டுப்படுத் தெரிந்த மனிதன் இறைவனின் வரமாக பூமியில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து கிடக்கும் மூலிகைகளின் சக்தியை அறிந்தும் உள்ளான், பயன்படுத்தியும் வருகிறான்,
    ஒரு காலத்தில் நான் மூலிகைகள் மனித உடலின் மருத்துவத்திற்கும் ரசவாதத்திற்கும் மட்டுமே பயன்படக்கூடியது என கருதியிருந்தேன், 1992-ஆம் வருடம் ராபர்ட் வில்சன் என்ற அன்பருக்காக சித்த வைத்தியம் பற்றி அறிந்த அவரின் உறவினர் ஆவி ஒன்றை அழைத்து பேசிக் கொண்டிருந்தோம், அந்த ஆவி பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது துண்டாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளை அனுத்துளுத்தான் தழை என்ற மூலிகையால் தொடும் ஷனத்திலேயே உறுப்புகள் ஒட்டிக் கொள்ளும் என்று கூறியது,
    மேலும் அந்த மூலிகைச் செடி கொல்லி மலை. உதக மண்டலம் போன்ற இடங்களிலும் செஞ்சிக் கோட்டையில் ராஜாக் கோட்டையில் உள்ள சுரங்க வழியில் இந்த மூலிகை உள்ளது என கூறியது, மேலும் அந்த ஆத்மா மூலிகைகளில் மந்திரப் பிரயோகம் பற்றியும் மூலிகைகளால் கிடைக்கும் மந்திர சித்திகளை பற்றியும் மிக விரிவாக கூறியது,
    மூலிகைகளில் மந்திர பிரயோகம் என்கிற விஷயம் எனக்கு புதுமையாக இருந்தது, அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வலுத்த வேளையில் ஆவி சொன்ன அனுத்துளுத்தான் தழை உண்மையா அப்படி ஒன்று உண்டா என்ற கேள்வி மண்டைக்குள் பூரான் ஊர்வதைப் போல் உறுத்திக் கொண்டேயிருந்தது,
    அந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் என நினைக்கிறேன், தினமலர் பத்திரிகையை புரட்டி கொண்டிருந்த போது உதக மண்டலத்தில் வெளிநாட்டு நபர் ஒருவரின் அனுபவம் என்ற செய்தி என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது, மலைச்சரிவுகளில் அவர் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராமல் எருமைமாடு ஒன்று அவர் தொடையில் முட்டி பெரும்காயத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் செடிகொடிகளுக்கு இடையில் பொறுக்க முடியாத வலியில் நடக்க முயாமல் நடந்து மேலே ஏறுகின்ற போது. திடீரென்று கால்களில் இருந்த வலிமறைந்ததாகவும் வலி என்ன ஆனது என்று காலைப் பார்த்த போது காயம்பட்டதற்கான அடையாளமே இல்லாது மறைந்து விட்டதாகவும் அந்த வெளிநாட்டுக்காரர் கூறி இருந்தார்,

   செடிகளுக்கு இடையில் நடந்து வரும் போது பலவிதமான செடி கொடிகள் தமது காயத்தை தொட்டதாகவும் அதில் ஏதோ ஒரு செடியின் வேகம் தான் தனது காயத்தை குணப்படுத்தியிருக்க வேண்டும் என கருதி அந்த செடி என்னவென்று அறிய 4 நாட்கள் தேடியதாகவும். இறுதி வரையில் தனக்கு கிடைக்கவே இல்லையென்று கூறியிருந்தது, மேலே சொன்ன ஆவி கூறியது என்னை நம்ப வைத்தது, அவரை குணப்படுத்தியது அனுத்துளுத்தான் தழையாகத்தான் இருக்க வேண்டும் என்று இன்றுவரை உறுதியாக நான் நம்புகிறேன்,

    இந்த விஷயம் மந்திரத்திற்கும் மூலிகைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும், அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற என் வேட்கையை மிக அதிகமாக அதிகரித்தது, இதன் அடிப்படையில் பலவித ஆராய்ச்சிகளையும் நான் மேற்கொண்டேன், அதர்வண வேதமந்திர சம்ஹிதை என்கிற சாகையில் குறிப்பிடப்பட்டுள்ள மரமல்லி இலையை எடுத்து ஜீவபீஜம் மந்திரத்தை உருஏற்றிய போது எனக்கு கிடைத்த விசேஷமான தேவதைகளின் பிரசன்னம் புது விதமான உத்வேகத்தை தந்தது, அந்த உத்வேகம் மூலம் என் சுய அனுபவமாகவும் பல பழைய கிரகந்தங்ளின் மூலமாகவும் பல அரிய விஷயங்களை அறியப் பெற்றேன், அதை அனைத்தையும் இல்லையென்றாலும் ஒரு சிலவற்றையேனும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

    மனிதர்களாகிய அனைவருக்குமே பணத்தின் மீது எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டு, அதுவும் உழைக்காமல் திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமó கிடைக்கின்ற பணம் என்றால் யாருமே அதை வேண்டாம் என்று ஒதுக்குவதில்லை, புதையலைத் தேடி பெரும் பயணம் மேற்கொண்ட சரித்திர வீரர்கள் எத்தனைப் பேரையோ நாம் படித்து இருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம், முதலில் புதையலுக்காக போட்டியிட்டு புதைந்து போன சாம்ராஜ்ஜியங்களும் உண்டு, அப்படிப்பட்ட புதையல் எங்கு இருக்கிறது, எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு, புதையல் எங்கு இருக்கிறது என்று காட்டி தரும் ஒரு மூலிகை இருக்கிறது, அதன் பெயர் நிலம் புரண்டி என்பது, புதையல் என்பது அக்கால மன்னர்கள். நிலப் பிரபுக்கள். மிகப் பெரும் கருமித்தனம் கொண்டவர்கள் மற்றும் சேமிப்பில் அக்கறை கொண்டவர்கள் தங்களது செல்வத்தை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்க பூமியில் புதைத்து வைப்பதாகும், அவர்கள் அப்படி செய்யும் போது வெறும் நிலத்தை தோண்டி மண்ணைப்போட்டு காசுகளை மூடி விடுவது இல்லை,    அப்பொருளை பாதுகாக்க பல அமானுஷ்ய சக்திகளை மந்திர உச்சாடனம் மூலம் அவ்விடத்தில் ஸ்தாபிதம் செய்துவிடுவார்கள், பூதம் புதையலை பாதுகாக்கும் கதையெல்லாம் வெறும் கற்பனைகளஞ்சியங்கள் அல்ல அதிலும் ஓரளவு உண்மைகள் உண்டு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்,

    அமானுஷ்ய சக்திகளின் பாதுகாப்பில் புதையல் இருப்பதால் தான் அதை எல்லோரும் எடுத்து விடுவது கடினமாக இருக்கிறது, இந்த சக்திகளின் பாதுகாப்பில் இருக்கும் புதையல்கள் ஒரே இடத்தில் இருப்பதும் இல்லை, இந்த சக்திகளால் பல இடங்களுக்கு நகர்த்தப்படுவதும் உண்டு, புதையல்களை பாதுகாக்கும் அமானுஷ்ய சக்திகளை அதற்குரிய முறையில் திருப்தி படுத்தினால் மட்டுமே நம்மால் எடுக்க முடியும்,

    நிலம் புரண்டி மூலிகைச் செடி புதையல் எங்கே இருக்கிறது என்பதை நமக்கு காட்டும் ஒரு கருவியே ஆகும், இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில் முளைத்திருக்கும், இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே  போய்விடும், அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள், இதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான்   கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும்,

    இத்தகைய நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி பறித்து வந்து குழித்தைலம் இறக்க வேண்டும், அந்த தைலத்தில் பச்சை கற்பூரம் ஜவ்வாது. கோரோசனை மூன்றும் சம எடையில் சேர்த்து குழைத்து அஞ்ஜனமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும், அந்த அஞ்ஜனத்தில் ஆஞ்சநேய மூல மந்திரம் மற்றும் அஞ்ஜனா தேவி மூல மந்திரம் முறையே 1008 முறை ஜபித்து உருஏற்ற வேண்டும், தேவையான போது அந்த அஞ்ஜானத்தை சிறிது எடுத்து வெற்றிலையில் தடவி மேற்குறிப்பிடும் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிக துல்லியமாக காட்டும்,    மேலும். இந்த மூலிகையின் வேரை கன்று போடாத பசுஞ்சானத்தோடு எரித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தை முறைப்படி ஜபித்து புதையல் இருப்பதாக நாம் கருதும் இடத்தில் இரவில் தெளித்து விடவேண்டும், காலையில் சென்று பார்த்தால் அங்கு புதையல் இருக்கும் பட்சத்தில் பாளம் பாளமாக வெடித்து இருக்கும். புதையல் இல்லையென்றால் சாதாரணமாக இருக்கும்

    புதையல் மிக ஆழமாக பல நூற்று அடிகளுக்கு கீழே இருந்தால் அந்த இடத்தில் ஸ்ரீலேகா என்ற மூலிகையை புதைத்து விட்டால் குறைந்தது 6 மாதத்தில் நாம் தோண்டி எடுக்கும் சொற்ப ஆழத்தில் புதையல் மேலே வந்துவிடும், ஸ்ரீ லேகா என்பது 16 வகை மூலிகைகளின் கூட்டு வடிவமாகும், இது இமயமலை சாரல்களில் மட்டுமே கிடைக்கிறது, மூலிகை சாஸ்திரத்திலும். மந்திர சாஸ்திரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வைத்து இருப்பார்கள்


     இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை மனிதர்களே வசியம் செய்யும் இடுமருந்து என்பதை மிக அதிகமாக கேள்விப்படுகிறோம், இவைகள் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் தான் அதிகமாய் இருந்தது, இன்றோ நகரங்களில் கூட இந்த இடுமருந்து ஊடுருவி விட்டது, இந்த மாதிரியான விஷயங்களால் பல குடும்பங்கள் தொல்லைகளை சந்தித்து அழிந்தும் போயிருக்கிறது, இந்த இடுமருந்தை எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல, புல்லாமணக்கு என்கிற மூலிகையை நிழலில் உணர்த்தி கல் உரலில் இடித்து வஸ்திர காயம் செய்து நெய்யில் குழைத்து காலை. மாலை இருவேளையும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால் போதுமானது, 3 நாட்களிலே இடுமருந்தின் வீரியம் குறைந்து சகஜ நிலைக்கு அவர்கள் திரும்பி விடுவார்கள், இந்த புல்லாமணக்கு என்பது பல்லி முட்டையைப் போன்று இருக்கும், இருப்பினும் முறைப்படி காப்பு கட்டி எடுக்கப்பட்ட மூலிகையாக இருந்தால் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்,

    ராமாயணத்தில் தசரதன் குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் என்பதை நாம் அறிவோம், அந்த யாகத்தில் கூறப்படும் மிக முக்கியமான புத்திர வர்ஷா என்கிற மந்திரத்தை விபூதி இலை என்ற மூலிகையில் உருஏற்றி அரை மண்டலம் சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புழுக்களை நீக்கியும் ஆண்களுக்கு மலட்டு தன்மைû போக்கியும் புத்திர சந்தானத்தையும் உண்டாக்கும், இம்முறையை இன்றும்கூட பலர் பயன்படுத்தி அற்புதமான பலனை அடைந்து வருகிறார்கள், இதை எம்மிடம் பெற்ற ஒரு அன்பர் கைமேல் பிள்ளையை பெற்றுள்ளார்,

    இன்று நமது தமிழகமெங்கும் வறட்சி, அதனால் விவசாயம் பாதிப்பு கிணறுகளில் தண்ணீர் இல்லை, பயிர்கள் பட்டுப்போயின என்ற அழுகுரலும் அங்கலாய்ப்பும் எங்கும் கேட்கிறது, கிணறுகளில் தண்ணீர் ஊர பன்னீர் இலையில் சடாட்சர மந்திரத்தை 1008 முறை உருஏற்றி நீர் இல்லாத கிணற்றில் போட்டால் 9 நாட்களுக்குள் நீர் இல்லாத கிணற்றில் நீர் சுரக்கும், பயிர்களின் மீது பூச்சிகள் பரவினாலும் தென்னை மரங்களில் குருத்துப் புழுக்கள் அதிகரித்தாலும் மா. தென்னை. பலா போன்ற மரங்களில் காய்கள் குறைந்தாலும் ஆடு திண்டாப்பாலையை பஸ்பமாக்கி பிரணவ மந்திரத்தை 1008 முறை உருஏற்றி பாதிக்கப்பட்ட மரம். செடி. கொடிகளின் மேல் தெளித்தால் பூச்சிகள் அழிந்து நன்றாக காய்கள் அதிகரிக்கும்


    இத்தகைய மூலிகைகளை உயரிய நிலையில் இருக்கும் தெய்வீக ஆத்மாக்களோடு மந்திர பிரயோகம் செய்பவர்களும் இருக்கிறார்கள், ஆத்மாவை அழைத்துப் பேசும் கலைதெரியாத சாதாரண மக்கள் கூட மன சுத்தியோடும் உடல் சுத்தியோடும் இதை செய்யலாம், அப்படி செய்தாலும் நல்ல பலனை கொடுப்பதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன், ஆனாலும் பயிற்சி பெற்ற நல்ல மனிதர்களை இதைச் செய்தால் கைமேல் பலன் கொடுப்பது கண் கூடான விஷயம்

    எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவர் மிகவும் சுறுசுறுப்பானவர், சதா சர்வகாலமும் ஏதாகினும் ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பார், அவர் வேலை செய்யும் வேகம் சாட்டையால் சுழற்றப்பட்ட பம்பரம் ஒன்று அதிவேகமாக சுற்றுவது போல் இருக்கும்   அவரைப்பற்றி நான் சிலநேரம் யோசிப்பதுண்டு, இரவில் கூட இவர் ஓய்வாக தூங்குவாரா? இல்லை அப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டுதான் இருப்பாரா? என்ற இறைவன் வேலை செய்வதற்காகவே இவரை படைத்துள்ளாரோ தானும் இவரை போல்தான் சதா வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று காட்டுவதற்காக இவரை பூமியில் நடமாட விட்டிருக்கிறாரோ என்றெல்லாம் எண்ணி வியந்ததுண்டு

    இப்படி சுறுசுறுப்பின் இலக்கணமான அந்த இளைஞர் திடீரென்று ஒருநாள் மயங்கி விழுந்து விட்டார், அதன் பின்பு அவரிடம் படிப்படியான சில மாற்றங்களை நான் கவனித்தேன், சோர்ந்து உட்கார்ந்து விடுவதும் வேலையிடத்திலேயே சுருண்டு படுத்துவிடுவதும் உண்டு, நாளடைவில் அவர் கைகால்கள் நரம்புத் தளர்ச்சியால் நடுங்குவதைப் போல் நடுக்ககம் எடுக்க ஆரம்பித்தது, அவரிடம் நான் விசாரித்தேன், உனக்கு என்ன ஆயிற்று என்றுõ  அவர் அதற்கு ஒன்றுமே புரியவில்லை, உடல் நடுங்குவதும். நாவறட்சி ஏற்படுவதும் அதற்கு மேல் கண்களின் பார்வை சக்தி குறைந்து விடுவதுமாக இருக்கிறது என்றார், அவர் மீது களிவிரக்கம் ஏற்பட்ட நான் எனது வசமாக இருந்த ஒரு தேவரையை அழைத்து அவருடைய உடலுக்கு என்ன என்று கேட்டேன், அதற்கு அந்த தேவதை அவருடைய மூளை நரம்புகளில் ஒன்றில் சீதளக் கிருமிகள் தாக்கி ரத்த ஓட்டத்திற்கு சிறு தடை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது, அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்ய விரும்பி அவரை ஒரு வாரமாக தேடினேன், கிடைக்கவில்லை,


  ஒரு வாரம் சென்று வந்து தான் மருத்துவமனைக்கு சென்றிருந்ததாகவும் பரிசோதனையில் தனது மூளை நரம்பில் நோய்த் தொற்று என்கிற பஆ உள்ளதாகவும் அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் சில வருடங்கள் மாத்திரைகளை சாப்பிட்டு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டதாக கவலையுடன் குறிப்பிட்டார், என் மீது தீவிர பக்தியும் அன்பும் கொண்ட அந்த நண்பரை குணமாக்கும்படி வேண்டினார்  அவருக்காக சிவ பெருமானின் பரிவாரங்களான 12 ருத்திரர்களில் தலைவரான ஸ்ரீ மாகருத்ரரின் நேரடி அம்சமான  ஸ்ரீ பிரபாசன் என்று போற்றுதலுக்குரிய தேவ கனத்தை அழைத்து பேசினோம், அவர் அந்த இளைஞரின் நோய் நீங்கிட சில மூலிகைகளை (அவர் கொடுத்த உத்தரவின்படி அந்த மூலிகைகளின் விபரம் இங்கு தரமுடியாமைக்கு வருந்துகிறோம்) அதர்வண வேத மந்திரங்களால் செறிவூட்டச் சொல்லி 2 மண்டலம் மட்டுமே அவரை சாப்பிடச் சொன்னார், அதன்படி அந்த இளைஞருக்கு செய்து கொடுத்தேன், ஒரு மாதத்தில் அந்த நண்பர் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டார், 2 மண்டலத்திற்கு பின்பு அவர் பரிபூரணமாக குணமடைந்து பழையபடி சுறுசுறுப்பு அடைந்து விட்டார், இன்று அவர் நல்ல நிலையிலே உள்ளார், இப்படி எத்தனையோ மந்திரமும் மூலிகையும் செய்த மகத்துவத்தை சொல்லிக் கொண்டே செல்லலாம்

    இறைவன் இந்த பூமியில் எந்தவொரு சிறிய வஸ்துவையும் காரணமில்லாமல் படைக்கவில்லை, ஒன்றைத்தழுவி ஒன்று இருப்பதைப் போல் தாவர ஜங்கமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பயன்படும் வண்ணமே இறைவன் சிருஷ்டித்துள்ளான், ரிக் வேதத்தில் வரும் பல ஸ்லோகங்கள் தாவரங்கள் சூரியனிடமிருந்து சக்தியை ஜீவர்களுக்கும் கொடுப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது, அதாவது அண்ட சராசரங்கள் அனைத்திலும் பரவியுள்ள பரமாத்மாவின் பரமசத்தை கிரஹித்து பூமிக்கு வழங்கி கொண்டிருக்கும் அமுத சுரபிகளே விருட்சங்கள் என்று வேதம் சொல்கிறது, விவிலியமும். திரு-கூர்-ஆனும் இதைப்போன்ற கருத்துக்களை வலியுறுத்துகின்றன,

    சுக்ருத சம்ஹிதையில் ஐந்தறிவும் ஆறறிவும் உடைய ஆத்மாக்களின் உடலின் நோயையும் மரங்களிலும் செடி கொடிகளிலும் மண்ணிலும் நோய்க்கான மருந்தையும் பரமான்மா வைத்துள்ளதாக வைரத்தை உடைத்தது போல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் சுசருதர் ஒளஷதங்கள் ரசங்களாலும் மந்திரங்களாலும் நிரப்பபட வேண்டும் என்றும் கூறுகிறார்.


    அந்தக் கால மருத்துவர்கள் மந்திரங்களிலும் வல்லுநர்களாக இருந்தார்கள், நவீன விஞ்ஞான கருவிகள் எதுவுமே இல்லாது சுசருதர் செய்த பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனைத்திலும் மந்திரங்கள் மூலிகைகளின் உதவிகளாலேயே செய்யப்பட்டதாக பழைய கிரந்தங்கள் கூறுகின்றன

    நோய் தீர்க்கும் மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆலயங்கள் கிரேக்க நாட்டில் இருந்துள்ளன, அந்த ஆலயங்களில் படுத்து உறங்குவதனாலேயே நோய்கள் குணமாகி விடுவதாக கிரேகக் நாட்டின் மந்திர நிபுணர் கேலன் கூறியுள்ளார், சீன நாட்டில் கி,மு,450 ஆண்டில் வாழ்ந்த எம்ப்படிடாக்கின்ஸ் மனிதர்களின் தோல் மீதுள்ள துளைகள் வழியாக பல தீய சக்திகள் புகுந்தே நோயை உருவாக்குகிறது என்றும் அதை மந்திரங்களால் தொட்டே குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்

    இன்று நடைமுறையில் உள்ள ரெய்கி. பிரானிக்ஹீலிங் என்ற முறைகளும் அண்டத்தில் உள்ள காஸ்மிக் மற்றும் பலவித பிரணவம் சார்ந்த பல கதிர்களை உடலுக்குள் செலுத்தவதே ஆகும், மந்திரங்களும் அண்ட நாதத்தின் மறுவடிவு ஆகும், ஆகவே அண்டசக்தியின் பிம்பங்களுடன் மூலிகைகளும் மந்திரங்களும் இணைந்தால் சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியமாக்கி விடலாம்.

    மந்திரங்களில் இரண்டு வகை உண்டு, குட்டிச்சுவரை கோபுரமாக்கும் நல்ல மந்திரங்கள் ஒருவகை சாம்பிராஜ்யங்களை சாம்பல் மேடாக்கும் தீய மந்திரங்களை ஒரு வகை, இத்தகைய இருவகை மந்திரங்கள் உலகெங்கும் நம்மிடையே உள்ளது, தீய மந்திரங்களின் கொடுமையான விளைவுகள் பல குடும்பங்களை நாசமாக்கி இருக்கின்றன, அத்தகைய தீய மந்திரங்களை ஒடுக்குவதற்குரிய மந்திர மூலிகைகள் ஏதேனும் உண்டா? என்று நான் தேடுதலில் ஈடுபட்ட போது ஆன்மீக ரீதியிலும். மற்ற வகையிலும் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டியிருக்கும் இன்னொரு உலக வாசிகளான தெய்வீக ஆத்மாக்கள் பலமூலிகைகளை எமக்கு காட்டின அவற்றில் தீவினைகளான பில்லிசூன்யத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சில மூலிகை வகைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.


    ஆடு தீண்டாப்பாலை. திருநாமப் பாலை. வில்வம். துளசி. வேம்பு. திரவந்தி. அழுகண்ணி. ஏர்சிங்கி. சூக்குளி. வல்லாரை. கொடுப்பை. கரிசிலாங்கண்ணி. தாழைமடல். நாபி. அஷ்வலோகா மற்றும் பல மூலிகைகள் கலந்து ஸ்ரீ ருத்மூலமந்திரம் ஹோமத்தில் ஆகுதி செய்யப்பட்ட மந்திர ஒளஷத பஸ்பத்தை மக்கள் பயன்பாட்டிற்கு இன்றும் கொடுத்து வருகிறோம், இந்த மூலிகை பஸ்பத்தை கடல் நீரில் கலந்து சில மந்திர உச்சாடனத்துடன் சூன்யம் இருக்கும். பகுதியில் தெளித்தால் 9 நாட்களிலேயே தீய சக்திகள் விலகி நல்ல சக்திகள் குடிகொண்டு பல சௌக்ய சௌபாக்கியத்தை தந்து வருவதை இன்றும் நடைமுறையில் பலர் அனுபவித்து வருகிறார்கள்.


    இத்தகைய தெய்வீக ஆத்மாக்கள் பூமியின் சுத்திகரிப்புகாகவும் அதாவது “வாஸ்து” நிவர்த்திக்காகவும் பல விதமான மூலிகை பஸ்பங்களை தந்துள்ளார்கள், பல இலட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் வாஸ்து நிவர்த்திக்காக இடித்து தரைமட்óடம் ஆக்கப்படுவதை இம்மூலிகை பஸ்பங்கள் தடுத்து வாஸ்து தோஷத்தை முழுமையாக நிவர்த்தி செய்துவிடுகிறது, பல கஷ்டங்களை தாண்டி கட்டப்படும் வீடுகளில் காலம் முழுக்க குடியிருக்க முடியாமல் தேச சஞ்சாரியாக அவதிப்படுபவர்களும். கழுத்தில் தொங்கவிடப்பட்ட கல் கிணற்றுக்குள் ஆழத்தில் அமுக்கி விடுவதைப் போல் கட்டிய வீட்டை விற்க முடியாமல் மூச்சு திணறுபவர்களும் தனது வாழ்நாளில் ஒரு சொந்த விடு கட்டி விடமாட்டோமா என்று ஏங்குபவர்களும் இந்த மூலிகை ஓளதஷதங்களால் நல்ல பயன்களை பெற்று இருப்பதை பார்க்கும் போது தெய்வீக ஆத்மாக்கள் மனித குலத்திற்கு செய்து வரும் மகத்தான சாதனையை எண்ணி நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை


   வெந்ததை தின்று வேளை வந்தால் சாவோம் என்று அர்த்தம் அற்ற பாதையில் அவசரகதியாக நமது வாழ்க்கை ரதம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது, நம்மால் எது சரி? எது தவறு? என்று தீர்மானிக்க முடியவில்லை, எதை விடுவது எதை தொடுவது என்ற முடிவுக்கும் வர முடியதில்லை, நுனியில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுபவனைப் போல் பித்து குளித்தனமாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், நமது அஜாக்கிரதையினாலும். அசட்டையினாலும் இழந்த செல்வங்கள் அது எத்தனையோõ  நான் இங்கு குறிப்பிடும் மந்திரங்களும். மூலிகைகளும் நம் கையில் இருந்து நழுவி விடும் சூழலிலேயே இன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது, வெளிச்சத்திற்கு வீட்டை கொளுத்தியவன் போல் நிறைய செல்வங்களை நாம் இழந்து விட்டோம்.


    இந்த கொஞ்ச நஞ்ச செல்வங்களையாவது இழக்காமல் இருக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், இன்று நாம் விழித்துக் கொண்டால் இன்னும் ஒரு 1000 ஆண்டிற்கு சுகமாக வாழலாம், இல்லை நான் தூங்கத்தான் செய்வேன் என்று அடம்பிடித்தால் வாழ்ந்ததற்கான அடையாளங்களைகூட பார்வையிட எந்த ஜீவனும் இருக்காது, நம் முன்னோர்கள் நமக்கு தந்து விட்டு சென்ற இந்த அரிய செல்வங்களை நமது அறிவீனத்தால் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சென்று விடகூடாது, இவைகளைப் பாதுகாக்க ரகசியங்களையாவது தெரிந்து வைத்திருக்க உழைப்போமாக!


மகாலக்ஷ்மி அஞ்சனம் வேண்டும் என்பவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


Next Post Home
 
Copyright © . அஞ்சனம்